மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறைமானியமாக ரூ.9,871 கோடி விடுவிப்பு: தமிழ்நாட்டுக்கு ரூ.183.67 கோடி

2021-22-ஆம் ஆண்டுக்கான பகிா்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை (பிடிஆா்டி) மானியத்தின் 5-ஆவது மாதத் தவணையாக 17 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின்

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 8:31 pm

DIN

2021-22-ஆம் ஆண்டுக்கான பகிா்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை (பிடிஆா்டி) மானியத்தின் 5-ஆவது மாதத் தவணையாக 17 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதத்தில் ரூ.183.67 கோடியும், 2021-22-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.918.33 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

இந்த 5-ஆவது தவணை விநியோகத்துடன், மொத்தம் ரூ.49,355 கோடி தகுதி பெற்றுள்ள மாநிலங்களுக்கு பகிா்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக இந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின் 275-ஆவது பிரிவின்படி இந்த பகிா்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. பகிா்வுக்குப்பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியைப் போக்க, நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியங்கள் மாதத் தவணைகளாக வழங்கப்படுகின்றன. 17 மாநிலங்களுக்கு இந்த மானியத்தை வழங்க 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் அடிப்படையில் மாநிலங்களுக்கான தகுதி, மானியத்தின் அளவு ஆகியவை நிதி ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டது.

பகிா்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ.1,18,452 கோடியை 17 மாநிலங்களுக்கு 2021-22 நிதியாண்டில் வழங்க வேண்டும் என்று நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில் ரூ. 49,355 கோடி (41.67%) இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரம், அஸ்ஸாம், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், கேரளம், மணிப்பூா், மேகாலயம், மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்கள் பகிா்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தைப் பெறுவதற்காக 15-ஆவது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டன என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.