அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் தயார்: கேரளம்

குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த கேரள அரசு தயாராக இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஆகஸ்ட் 2021, 10:56 am

DIN


குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த கேரள அரசு தயாராக இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் வாகனத்திலிருந்தபடியே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மகளிர் கல்லூரியிலுள்ள இதற்கான தடுப்பூசி மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பார்வையிட்டார்.

இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியது:

"வாகனத்திலிருந்தபடியே தடுப்பூசி செலுத்திகொள்ளும் மையங்களின் சிறப்பம்சம், மக்கள் தங்களது வாகனங்களிலிருந்து இறங்காமலே பதிவு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டு பரிசோதனையும் செய்துகொள்ளலாம். தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு யாருக்கேனும் பிரச்னை ஏற்பட்டால் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அங்கேயே வழங்கப்படும். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்படும்.

18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவருக்கும் செப்டம்பர் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது அரசின் இலக்கு. 

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 52 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 19 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். தேசிய அளவிலான சராசரியைக் காட்டிலும் இது கூடுதல் சராசரி.

கேரளத்தில் நிறைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் அதிகமாக உள்ளது. கரோனா பாதிப்புகள் அதிகரிப்பதால், ஓணம் பண்டிகையின்போது அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாழ்வும் வாழ்வியலும் முக்கியம்தான், சுயபாதுகாப்பு அதைவிட முக்கியம்."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.