‘தடுப்பூசி செலுத்துவதில் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை’: மத்திய அமைச்சர்
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.


ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரையில்,
மாநிலங்களுக்கு இந்த மாதம் மத்திய அரசு வழங்கும் இலவச தடுப்பூசி போக மீதம் கையிருப்பில் 2 கோடி தடுப்பூசிகள் உள்ளன. ஆசிரியர் நாளான செப்டம்பர் 5-க்கு முன்னதாக முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநில அரசுகளிடம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாஅக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 59.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...