மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,831 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 4,831 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 4,831 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,831 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,52,273ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 126 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,37,026ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று 4,455 பேர் மீண்டனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 62,59,906ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 51,821 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 5,34,56,403 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...