வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

'பஞ்சாப் மக்களுக்கு இரு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்' - கேஜரிவால்

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் உயர்தரத்துடன் ஏராளமான அரசுப் பள்ளிகள் கட்டப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:38 pm

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் உயர்தரத்துடன் ஏராளமான அரசுப் பள்ளிகள் கட்டப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

Story image

இந்நிலையில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் இன்று பஞ்சாபின் பதன்கோட் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

Story image

அப்போது பேசிய அவர், 'பஞ்சாப் மக்களுக்காக 2 வாக்குறுதிகளை அளிக்கிறேன். தில்லியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் எல்லையில் வீரமரணம் அடைந்தால் அந்த குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் ராணுவ வீரர்களுக்கும் இது கொண்டு வரப்படும். 

Story image

குர்தாஸ்பூர் மற்றும் பதான்கோட் ஆகிய இடங்களில் இருந்து அதிகம் பேர் ராணுவத்திற்குச் செல்கின்றனர். உண்மையில் ராணுவ வீரர்களின் தேசத்தில் இருப்பதை பாக்கியமாக உணர்கிறேன். போருக்கு செல்லும் வீரர்களின் எண்ணிக்கையைப் போல போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கையும் இந்த 2 இடங்களில்தான் இருக்கிறது.

Story image

இரண்டாவதாக, தில்லியைப் போன்று பஞ்சாபிலும் அரசுப்பள்ளிகள் அதிகம் கட்டப்படும். கடந்த ஆண்டு மெலானியா டிரம்ப் தில்லி வந்தபோது, தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளைப் பார்க்க விரும்பினார். தில்லி அரசுப் பள்ளிகள் அமெரிக்காவிலும் பிரபலமாக உள்ளன.

Story image

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கா, கனடா, லண்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பஞ்சாபில் உள்ள அரசுப் பள்ளிகளைப் பார்க்க வருவார்கள். அந்த அளவுக்கு அரசுப்பள்ளிகள் உயர்தரத்துடன் கொண்டு வரப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.