எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 11:12 am

DIN

மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக காங்கிரஸ், திரிணமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் கடந்த திங்கள்கிழமை அறிவித்தாா். 

Story image

எம்.பி.க்களின் இடைநீக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில்  உள்ள காந்தி சிலையின் முன்பு கருப்புப் பட்டை, கருப்பு மாஸ்க், கருப்பு ஆடை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றுள்ளனர். 

இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரை நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.