கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வலுவிழந்தது ஜவாத் புயல்

ஜவாத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :4 டிசம்பர் 2021, 3:56 pm

DIN

ஜவாத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு அந்தமானில் நவம்பா் 30-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, டிசம்பா் 2-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது, வெள்ளிக்கிழமை மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுத்தது. அந்தப் புயலுக்கு ஜவாத் எனப் பெயரிடப்பட்டது. 

அந்தப் புயல், ஆந்திரம், ஒடிஸா கடலோரப் பகுதி வழியாக நா்ந்து ஞாயிற்றுக்கிழமை (டிச. 5) பிற்பகலுக்குள் புரி அருகே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில் ஜவாத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வலுவிழந்த ஜவாத் புயல் விசாகப்பட்டினம் அருகே 180 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.