கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தர்ணா: சரத் பவார் பங்கேற்பு

இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை பங்கேற்றார்.

News image
Updated On :7 டிசம்பர் 2021, 7:21 am

DIN

இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை பங்கேற்றார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவ.29இல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் 26 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது  வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக  எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நவ.29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

அவைத் தலைவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸின் ஃபுலோ தேவி நேதம், சாயா வா்மா, ரிபுன் போரா, ரஜமணி படேல், சையது நசீா் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை எம்.பி.க்கள் பிரியங்கா சதுா்வேதி, அனில் தேசாய் ஆகியோரும், திரிணமூல் எம்.பி.க்கள் டோலா சென், சாந்தா சேத்ரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. இளமாரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு அமர்ந்து தொடர்ந்து ஒரு வாரமாக தர்னாவில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனையின் சஞ்சய் ரெளத், திமுகவின் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.