சட்டப் பிரிவு 370 ரத்துக்குப் பிறகு அப்பாவி மக்கள் 96 பேர் கொல்லப்பட்டுள்ளனர்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, நவம்பர் வரை அப்பாவி மக்கள் 96 பேர், பயங்கரவாதிகள் 366 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, நவம்பர் வரை அப்பாவி மக்கள் 96 பேர், பயங்கரவாதிகள் 366 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தது.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஆகஸ்ட் 5, 2019-இல் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் பண்டிதர்கள்/ஹிந்துக்கள் எவரும் அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை. எனினும், காஷ்மீரில் வசிக்கும் காஷ்மீர் பண்டிதர் குடும்பங்கள் சில சமீபத்தில் ஜம்மு பிராந்தியத்துக்கு இடம்பெயரந்துள்ளனர். இதில் பெண்களும், குழந்தைகளுமே பெரும்பாலானவர்கள். இடம்பெயர்ந்த குடும்பங்கள் அரசு அலுவலர்களின் குடும்பங்கள்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com