தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஹெலிகாப்டர் விபத்து: குன்னூர் வருகிறார் ராஜ்நாத் சிங்

குன்னூர் அருகே இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்
Updated On :8 டிசம்பர் 2021, 9:48 am

DIN

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூலூரிலிருந்து இன்று காலை விளிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

இந்நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் சென்ற போது விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விபின் ராவத்தின் நிலை என்ன என்று தகவல் தெரியாத நிலையில் தில்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தில்லியில் இருந்து கிளம்பும் ராஜ்நாத் சிங் இன்று குன்னூர் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.