மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தீநுண்மி தொற்று தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், சீனா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. வழக்கமான கரோனா தொற்றைக் காட்டிலும் அதி தீவிரமாக பரவக் கூடியதாக ஒமைக்ரான் தீநுண்மி கருதப்படுகிறது.
இதையடுத்து ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- இந்துக்களின் ஆட்சியை கொண்டு வர விரும்புகிறோம்: ராகுல் காந்தி
இதையடுத்து மகராஷ்டிரத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை மகாராஷ்டிரம்-18, ராஜஸ்தான் 9, தில்லி 2, குஜராத் 3, ஆந்திரம் 1, சண்டீகர் 1, கர்நாடகம் 3 என மொத்தம் 37 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோருக்கு மிதமான அறிகுறிகள்தான் தென்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


