என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

2021ம் நிதியாண்டில் செல்போன்களின் ஏற்றுமதி அதிகரிப்பு

2021ம் நிதியாண்டில் செல்போன்களின் ஏற்றுமதி 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 4:45 pm

2021ம் நிதியாண்டில் செல்போன்களின் ஏற்றுமதி 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: கடந்த 20217-18ம் நிதியாண்டில் 0.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த செல்போன்களின் ஏற்றுமதி, 2021ம் நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

2017-18ம் ஆண்டில் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த செல்போன்கள் இறக்குமதி, 2021ம் ஆண்டில் ஏப்ரல் 21ம் தேதி முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை 0.5 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. மின்னணுப்  பொருட்களின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத்  திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இது இந்தியாவை உலகளாவிய  மின்னணுப்  பொருட்களின் மையமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.  மேலும் மின்னணுப் பொருள்  உற்பத்தி துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. செல்போன்கள் உட்பட மின்னணுப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.