இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 138 கோடியைக் கடந்தது!

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 138 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :20 டிசம்பர் 2021, 11:19 am

DIN

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 138 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. இதில் 75% தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. 

தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்த மத்திய. மாநில அரசுகளால் ஒவ்வொரு பகுதியிலும் மெகா தடுப்பூசி முகாம்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் வயதானவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளும் பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் உள்ளன. 

இதுபோன்ற பல்வேறு முயற்சிகளால் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 138 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் இரு தவணை தடுப்பூசிகளும் அடங்கும். 

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15,82,079 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,37,67,20,359 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.