கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த சதி’: மல்லிகார்ஜுன கார்கே

எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்த பேச்சுவார்த்தைக்கு 4 எதிர்க்கட்சிகளை மட்டுமே அழைத்தது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிளவுபடுத்த நிகழ்த்தும் சதி

News image

காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே(கோப்புப்படம்)

Updated On :20 டிசம்பர் 2021, 5:17 am

DIN

எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்த பேச்சுவார்த்தைக்கு 4 எதிர்க்கட்சிகளை மட்டுமே அழைத்தது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிளவுபடுத்த நிகழ்த்தும் சதி என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்தார்.

மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்களை குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்து கடந்த நவம்பர் 29ஆம் தேதி உத்தரவிட்டப்பட்டது. இதையடுத்து இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டு நாடாளுமன்ற பணிகள் தேங்கியுள்ளன.

இதையடுத்து மத்திய அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு 4 எதிர்க்கட்சிகளை மட்டுமே அழைத்திருந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது குறித்து எதிர்க்கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பேச்சுவார்த்தை நடத்த 4 எதிர்க்கட்சிகளை மட்டுமே அரசு அழைத்துள்ளது. இது எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும் சதியாக உள்ளது. இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் இருக்கின்றோம். பேச்சுவார்த்தைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.