ஜெய்ப்பூரில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி ஜெய்ப்பூர் எஸ்எம்எஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுதிர் பந்தாரி கூறியது:
"மரபணு பரிசோதனையில் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் ஆர்யுஹெச்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்காவது நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர். இவர் தில்லியில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஜெய்ப்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. பயணங்களும் எதுவும் மேற்கொள்ளவில்லை."
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...