அதிகரிக்கும் ஒமைக்ரான்: பிரதமர் ஆலோசனை
நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.


நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 236 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகளவாக மகாராஷ்டிரத்தில் 65 பேருக்கும், தில்லியில் 64 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) காலை தெரிவித்தது.
இதையும் படிக்க | சென்னையில் 15 நாள்களில் 2.16 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை
ஒமைக்ரான் வகை கரோனா நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இந்த ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார்.
ஒமைக்ரான் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள அறிவியல் ஆதாரத்தின்படி டெல்டா வகையைக் காட்டிலும் ஒமைக்ரான் வகை மூன்று மடங்கு அதிகம் பரவக்கூடியது என்பது தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...