சண்டீகர் மாநகராட்சித் தேர்தல்: ஆம் ஆத்மி முன்னிலை
சண்டீகர் மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 2 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


சண்டீகர் மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 2 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சண்டீகர் மாநகராட்சித் தேர்தலில் 35 வார்டுகளுக்கான வாக்குப் பதிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே களமிறங்கின.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காலை முதலே ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 2 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 14, பாஜக 12, காங்கிரஸ் 8, சிரோமணி அகாலி தளம் ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...