பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பஞ்சாப் செல்லத் தடை

கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் ஜனவரி 15-ஆம் தேதி முதல் பஞ்சாப் செல்லத் தடை விதித்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2021, 4:43 pm

DIN

கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் ஜனவரி 15-ஆம் தேதி முதல் பஞ்சாப் செல்லத் தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனால், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரையும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய விமான நிலையங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுகோள் வைத்துள்ளது. இந்நிலையில், ஜனவரி 15-ஆம் தேதி முதல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் மாநிலத்திற்குள் வருவதற்கு பஞ்சாப் அரசு தடை விதித்துள்ளது. 

வெளியிலிருந்து வருபவர்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயம். இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழைக் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.