நீங்கள் விரும்பும் புதிய இந்தியாவுக்காக பணியாற்றுங்கள் என்று கான்பூரில் நடைபெற்ற ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் ஐஐடியில் இன்று (டிச.28) 54-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,
கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு கட்டப் பணிகள் நடைபெற்றன. அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீங்கள் விரும்பும் இந்தியா நோக்கி நீங்கள் பணிபுரியுங்கள். ஏற்கெனவே பல ஆண்டுகள் வீணாகியுள்ளது.
இரண்டு தலைமுறை கடந்துவிட்டது. இனி இன்றிலிருந்து வரும் அடுத இரண்டு மாதங்களைக் கூட வீணாக்கிவிடக்கூடாது என்று கூறினார்.