மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 85 பேருக்கு ஒமைக்ரான்

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 85 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :29 டிசம்பர் 2021, 4:08 pm

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 85 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 3,900 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,306 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒமைக்ரான்:

புதிதாக 85 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • இதில் 47 பேருக்கு தேசிய வைராலஜி இன்ஸ்ட்டிடியூட்டில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 47 பேரில் 43 பேர் சர்வதேசப் பயணிகள். 4 பேர் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள். இதில் 34 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். 
  • மீதமுள்ள 38 பேரில் மும்பையைச் சேர்ந்தவர்கள் 19 பேர்.

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது.

இதில், ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டவுடன் 99 பேர் வீடு திரும்பினர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.