/

ஜம்மு-காஷ்மீரில் மூடுபனி: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இடங்களில் நேற்றிரவு முதல் கடும் மூடுபனி நிலவி வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

News image

Fog in Jammu as mercury rise in J&K, Ladakh

Updated On :12 பிப்ரவரி 2021, 5:43 am

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இடங்களில் நேற்றிரவு முதல் கடும் மூடுபனி நிலவி வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் ஜம்முவில் கடும் பனி நிலவி வந்த நிலையில், பிப்ரவரி மாதம் முதல் நிலைமை சற்று சீரடைந்தது. ஆனாலும், இரவு நேரங்களில் அதிகமாக மூடுபனி நிலவி வருவதையடுத்து, இது காலையிலும் தொடர்ந்து அதிக பனிமூட்டம் நிலவி வருகின்றது. இதனால், மக்கள் வெளியில் வரமுடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. 

அடுத்த வாரத்தில் வானிலை சற்று மேம்படு வாய்ப்புள்ளதாகவும்,  அதிகபட்ச வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வுமைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

ஸ்ரீநகரில் மைனஸ் 0.6, ஆகவும், பஹல்காம் மைனஸ் 4.6 ஆகவும், குல்மார்க்கில் மைனஸ் 2.4 ஆகவும், லடாக்கில் மைனஸ் 10.5, கார்கில் மைனஸ் 13 மற்றும் டிராஸ் மைனஸ் 20.6 எனவும் இரவில் மிகக் குறைந்த வெப்பநிலை நிலவி வருகின்றது.

ஜம்மு நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 9.8 ஆகவும், கத்ரா 10.5, படோட் 6.6, பன்னிஹால் 3.2 மற்றும் படேர்வா 2.7 ஆகவும் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.