நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,309 பேருக்கு கரோனா
கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 9,309 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


புதுதில்லி: கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 9,309 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 9,309 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,08,80,603-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 87 போ் உயிரிழந்தனா்.
தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை தொடா்ந்து 6-ஆவது நாளாக 100-க்குக் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,447-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,05,89,230 போ் குணமடைந்தனா். நாட்டில் தற்போது 1,35,926 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சுமாா் 3 வாரங்கங்களுக்கு மேலாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாட்டில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை 75,05,010 -ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...