அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கேரள காங்கிரஸ் உண்ணாவிரதம்

​பெட்ரோ, டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு கேரள காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.

News image
கேரள காங்கிரஸ் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 7:32 pm

DIN


பெட்ரோ, டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு கேரள காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.

காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி தொடங்கி வைத்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

இதுபற்றி ராமச்சந்திரன் கூறியது:

" மத்திய அரசு பெட்ரோல் பொருள்களின் விலையை உயர்த்தி ஏழை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்காமல் இருக்கிறது. கடந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின்போது முதல்வர் உம்மன் சாண்டி மாநில வரியைக் குறைத்தார். ஆனால், பினராயி விஜயன் அரசு அதைச் செய்யத் தவறுகிறது.

இது முன்னெடுப்புதான். மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தீர்வு காணாவிட்டால் காங்கிரஸ் கட்சி நாளை முதல் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும்." என்றார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை மத்திய அரசு திங்கள்கிழமை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.