விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கரோனா: இந்தியாவில் புதிதாக 11,610 பேர் பாதிப்பு; 100 பேர் பலி

இந்தியாவில் கரோனாவால் புதிதாக 12,194 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 320-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2021, 5:18 am

DIN


புது தில்லி: இந்தியாவில் கரோனாவால் புதிதாக 12,194 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 320-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கரோனாவால் புதிதாக11,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 913-ஆக அதிகரித்துள்ளது. 

தேசிய அளவில் கரோனாவில் இருந்து 97.33 சதவீதத்தினர் குணமடைந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.43 சதவீதமாக உள்ளது. தற்போது, கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,36,549 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.25 சதவீதம் ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடர்ந்து 1.50 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாட்டில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை 89,99,230 -ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.