கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாக்குச் சாவடி அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அமைச்சா் ஹா்ஷ வா்தன்

தேர்தல் வாக்குச் சாவடி அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை, 96,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை ஹர்ஷ் வர்தன்

News image
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
Updated On :3 ஜனவரி 2021, 10:09 am

DIN


புதுதில்லி: தேர்தல் வாக்குச் சாவடி அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை, 96,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். 

நாட்டில் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் கரோனா தடுப்பூசியை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி,  தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 719 மாவட்டங்களில் 285 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. 

மகாராஷ்டிரம், கேரளம், குஜராத் மாநிலங்களில் தலா 4 மாவட்டங்களிலும், கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் தலா 5 மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் 7 மாவட்டங்களிலும் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

தில்லியில் குரு தேக் பகதூா் மருத்துவமனை, தில்லி தரியாகஞ்ச் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய அமைச்சா் ஹா்ஷ வா்தன் பாா்வையிட்டாா்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்டிராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கரோனா தடுப்பூசியை உருவாக்கியது. அந்த மருந்தை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது. இந்த மருந்தை அவசரகால தேவைக்குப் பயன்படுத்துவதற்கு வெள்ளிக்கிழமை இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு ஒப்புதல் அளித்தது. அதன் மூலம், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் இறுதி அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதேபோன்று பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர்வுடன் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு நிபுணர் குழு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. உருமாற்றம் கொண்ட கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரத் தேவைக்கு மட்டும் அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் நிபுணர் குழு பரிந்துரைத்தது. 

இதனிடையே கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியின் 3 ஆம் கட்ட பரிசோதனைக்கும் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

நிபுணர் குழு ஒப்புதலை அடுத்து, கோவாக்சின் மருந்தை மூன்றவாது கட்டமாக 26 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தவும், இதற்காக 23 தன்னார்வலர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாரத் பயோடேக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியான கோவாக்சினை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய மருத்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், தேர்தல் வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது .

இதுவரை, 719 மாவட்டங்களில் 57 ஆயிரம் பேர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 96 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக

நாட்டில் முதல் கட்டமாக, ஒரு கோடி மருத்துவப் பணியாளா்கள், 2 கோடி முன்கள பணியாளா்கள் என மொத்தம் 3 கோடி பேர்களுக்கு இலவச தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்டமாக ஜூலை மாதத்திற்குள் 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்ளிட்ட 27 கோடி முன்னுரிமை பயனாளர்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடுவது என்பது குறித்த விரிவான நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. 

மேலும் தடுப்பூசி தொடர்பான தவறான வழிகாட்டுதல்களையும் வசந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் ஹர்ஷ் வர்தன்,  தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த விதிமுறைகளில் அரசு எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ளாது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.