விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே
விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்


புதுதில்லி: விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு முழுமையாக பரிசீலிக்கும் என்று உறுதியளித்தார்.
மேலும் வேளாண் துறை அமைச்சருடன் விவசாயிகள் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தவர், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை மாநிலங்களைத் தவிர மற்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் தீவிரம் காட்டவில்லை என்றும், குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் விவசாயிகளின் நில உரிமைகளை வேளாண் சட்டங்கள் பாதுகாக்கும் என்று ராம்தாஸ் அதவாலே கூறினார்.
தெலங்கானா மாநில அரசிடம் மாநில அரசு ஊழியர்களின் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு கேட்டுக்கொண்டவர், மாநிலத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு சாதி, மத வேறுபாடின்றி 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.
ஓபிசி இடஒதுக்கீட்டின் துணை வகைப்பாடு குறித்த முடிவு வெளிவரக்கூடும், அதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது. உதவித்தொகைகளை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு அண்மையில் எடுத்த முடிவைப் பற்றி குறிப்பிடுகையில், அதற்கான ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் அதிகரிக்கும்.
ஒபிசி வகுப்பினருக்கு மத்திய தொகுப்பு இடங்களில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவுகள் விரைவில் வெளிவரும், அதற்கான முன்மொழிவுகள் பரிசீலனையில் உள்ளது. சமீபத்தில் உதவித்தொகைகளை அதிகரிப்பது குறித்த மத்திய அசின் முடிவு குறித்து குறிப்பிடுகையில், அதற்கான ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் அதிகரிக்கும் என்று அதவாலே கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...