தில்லியில் டிராக்டர் பேரணி உறுதி: விவசாய சங்கங்கள்
குடியரசு நாளன்று உறுதியாக டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.


குடியரசு நாளன்று உறுதியாக டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசுடனான 10-ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக தில்லி விஞ்ஞான் பவனுக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் வந்தடைந்தனர்.
அப்போது பேசிய பாரதிய கிசான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த குருநம் சிங் செளத்ரி, தில்லியில் டிராக்டர் பேரணி நிச்சயம் நடைபெறும். அவர்கள் (மத்திய அரசு) அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களை மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
மத்திய அரசுடன் ஏற்கெனவே நடைபெற்ற 9 கட்டப் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இன்று (ஜன.20) 10-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...