45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜன. 27ல் சசிகலா விடுதலை உறுதி: கர்நாடக சிறைத்துறை

ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதி என கர்நாடக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :25 ஜனவரி 2021, 9:35 am

DIN

ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதி என கர்நாடக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

சொத்துகுவிப்பு  வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள வி.கே.சசிகலாவின் தண்டனைக் காலம் முடிந்து அவர் நாளை மறுநாள்(ஜன.27) விடுதல் ஆகவிருக்கிறார். 

இதனிடையே சில நாள்களுக்கு முன்னதாக சசிகலாவுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கரோனா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது விடுதலை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், சசிகலா வருகிற 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதி என கர்நாடக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாளை விடுமுறை நாள் என்பதால் சசிகலா விடுதலை தொடர்பாக ஆவணப் பணிகள் இன்றே முடிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.