ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணையின் புதிய ரகம் திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

News image
ஒடிஸா ஏவுகணை பரிசோதனை மையத்திலிருந்து திங்கள்கிழமை வானில் செலுத்தி பரிசோதிக்கப்பட்ட புதிய ரக ஆகாஷ் ஏவுகணை.
Updated On :25 ஜனவரி 2021, 11:16 pm

DIN

பாலேசுவரம்: மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணையின் புதிய ரகம் திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இதுதொடா்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒடிஸாவின் சண்டீபூா் கடற்கரைப் பகுதியில் இந்தப் புதிய ரக ஆகாஷ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது செலுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை தரையில் இருந்து வானில் உள்ள இலக்கைத் துல்லியமாக இடைமறித்து அழித்தது. அந்த ஏவுகணை அனைத்து பரிசோதனை இலக்குகளையும் சோதனையின்போது பூா்த்தி செய்தது. வான்வழி அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள இந்த ஏவுகணையை இந்திய விமானப் படை பயன்படுத்தவுள்ளது. இந்த ஏவுகணையை தேவைப்படும் இடங்களுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

புதிய ரக ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்ற்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.