தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லியில் விவசாயிகள் மீது பூக்களைத் தூவி ஆதரவு தெரிவித்த மக்கள்!

தில்லி எல்லைக்குள் நுழைந்த விவசாயிகள் மீது உள்ளூர் மக்கள் பூக்களைத் தூவி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். 

News image
விவசாயிகளின் டிராக்டர் பேரணி
Updated On :26 ஜனவரி 2021, 7:26 am

DIN

தில்லி எல்லைக்குள் நுழைந்த விவசாயிகள் மீது உள்ளூர் மக்கள் பூக்களைத் தூவி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக குடியரசு நாளான இன்று தில்லியில் விவசாயிகள் இணைந்து மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுக்கின்றனர். இதில் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 100 கிமீ தூரத்துக்கு பேரணியில் ஈடுபடுகின்றனர். 

குடியரசு தினத்தை முன்னிட்டு கட்டுப்பாடுகளுடன் போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்தனர். காலை 11.30 மணியளளவில் பேரணியைத் துவங்கவிருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில் இன்று காலை 8 மணிக்கே திக்ரி எல்லையில் போராட்டத்தைத் துவங்கினர். போலீஸாரின் தடுப்புகளை மீறி சிங்கு எல்லையில் நுழைந்து தற்போது மத்திய தில்லியை நோக்கி பேரணி நடந்துகொண்டு இருக்கிறது. 

இந்நிலையில், காசிப்பூர் எல்லைக்கு அருகிலுள்ள ஸ்வரூப் நகரில் உள்ள மக்கள், அவ்வழியே வந்த விவசாயிகள் மீது மலர்களைத் தூவினர். 

காசிப்பூர் எல்லை - அப்ஸ்ரா எல்லை - ஹப்பூர் சாலை - ஐ.எம்.எஸ் கல்லூரி - லால் குவான் - காசிப்பூர் எல்லை பாதையில் பேரணி நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் தில்லி எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த, ஃபரிதாபாத்-பல்வால் எல்லையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.