மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு குடிநீர் நிறுத்திய காவல்துறை

எல்லையில் போராடும் விவசாயிகளுக்கான குடிநீர் கொண்டுசெல்லும் டேங்கர் லாரிகளுக்கு தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

News image
எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு குடிநீர் நிறுத்திய காவல்துறை (கோப்புப்படம்)
Updated On :29 ஜனவரி 2021, 7:05 am

DIN

எல்லையில் போராடும் விவசாயிகளுக்கான குடிநீர் கொண்டுசெல்லும் டேங்கர் லாரிகளுக்கு தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

தில்லி சிங்கு எல்லையில் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிராக அப்பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் வெளியேற காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. சினங்கு எல்லையிலிருந்த விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீஸையும் காவல்துறையினர் வழங்கினர்.

சிங்கு எல்லையுடனான தொடர்பை துண்டிக்கும் விதமாக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் காவல்துறையினர் குழி தோண்டினர்.

இதனிடையே சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகளுக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 64-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.