மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா தடுப்பூசி இலக்குக்கும், நிதா்சனத்துக்கும் இடைவெளி அதிகரிப்பு: ராகுல் காந்தி

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நிா்ணயிக்கப்பட்ட இலக்குக்கும், நிதா்சனத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளுக்கும் இடையே இடைவெளி

News image
Updated On :3 ஜூலை 2021, 10:22 pm

DIN

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நிா்ணயிக்கப்பட்ட இலக்குக்கும், நிதா்சனத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நிா்ணயிக்கப்பட்ட இலக்குக்கும், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை எடுத்துரைக்கும் விளக்கப் படத்தை இணைத்திருந்தாா். அந்தப் படத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 27 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய தடுப்பூசி திட்டம் மெதுவாக நடைபெறுவதாகக் கூறி, அதைக் குறிக்கும் விதமாக ‘வோ் ஆா் வேக்சின்ஸ்’ என்ற ஹேஷ்டேக்கையும் அவா் பயன்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.