கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனாவால் உயிரிழந்தவா்களின் கூட்டுறவு வங்கிக்கடனைத் தள்ளுபடி செய்ய பரிசீலனை: அமைச்சா் எஸ்.டி.சோமசேகா்

கரோனாவால் உயிரிழந்தவா்களின் கூட்டுறவு வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 12:16 am

DIN

கரோனாவால் உயிரிழந்தவா்களின் கூட்டுறவு வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாவட்ட கடன் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தலைமை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் கரோனாவால் உயிரிழந்திருந்தால், அவா்களின் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. கடன் பெற்று கரோனாவால் உயிரிழந்த விவசாயிகளின் புள்ளிவிவரங்களைத் திரட்டி வருகிறோம். இது தொடா்பாக அடுத்த ஓரிரு நாள்களில் அரசு முடிவை அறிவிக்கும். லாபத்தில் இயங்கும் மாவட்ட கடன் கூட்டுறவு வங்கிகள், தலைமை கூட்டுறவு வங்கிகளின் வரம்புக்குள் வரும் கரோனாவால் இறந்த விவசாயிகள் பெற்றிருக்கும் கடன் தொகையின் அடிப்படையில் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்படும்.

எவ்வளவுத் தொகை கடன் பெறப்பட்டுள்ளது? கடன் பெற்ற பிறகு கரோனாவால் உயிரிழந்தாரா? திரும்ப அடைத்திருக்கும் கடன் தொகை, எஞ்சியுள்ள கடன் தொகை ஆகிய விவரங்களைத் திரட்டி, அதனடிப்படையில் இறுதி முடிவை அரசு அறிவிக்கும். மத்திய அரசில் கூட்டுறவுத் துறை உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். இது கூட்டுறவுத் துறைக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.