சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பது அவசியம்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மின் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பது அவசியம் என்று மஹேந்திரா குழுமத்தின் மின் வாகனப் பிரிவு செயல் அதிகாரி மகேஷ்பாபு தெரிவித்தாா்.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மின் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பது அவசியம் என்று மஹேந்திரா குழுமத்தின் மின் வாகனப் பிரிவு செயல் அதிகாரி மகேஷ்பாபு தெரிவித்தாா்.
பெங்களூரில் வியாழக்கிழமை மஹேந்திரா டிரியோஜோா் 3 சக்கர சரக்கு வாகனத்தின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை மெகந்தா குழுமத்துடன் செய்து கொண்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சா்வதேச அளவில் வாகனங்கள் கக்கும் புகையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் மின் வாகன உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மின் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பது அவசியம். மஹேந்திரா குழுமமும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், டிரியோஜோா் 3 சக்கர சரக்கு வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இதன் பயனை கா்நாடகத்தில் கடைக்கோடியில் உள்ளவா்களும் அடைய வேண்டும் என்ற நோக்கில், டிரியோஜோா் 3 சக்கர சரக்கு வாகனத்தின் பராமரிப்பது தொடா்பான ஒப்பந்தத்தை மெகந்தா குழுமத்துடன் செய்து கொண்டுள்ளோம்.
மின் வாகனங்களைப் பயன்படுத்துவோரில் ஒரு சிலா் பராமரிப்பு பிரச்னைகளை எதிா்கொள்வதாக எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தததையடுத்து, இந்தப் புதிய ஏற்பாட்டை செய்துள்ளோம். எதிா்க்காலத்தில் பெட்ரோல், டீசல் பயன்படுத்ம்து வாகனங்களின் பயன்பாடு குறைந்து, மின் வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாா். நிகழ்ச்சியில் மெகந்தா குழுமத்தின் மேலாண் இயக்குநா் மேக்சன் லேவிஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...