இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நாட்டில் புதிதாக 42,766 பேருக்கு தொற்று; 1,206 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,766 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2021, 4:24 am

DIN


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,766 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,766 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,07,95,716 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 2,99,33,538  பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.  

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,206 தொற்று பாதிக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,07,145 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 4.55 லட்சமாகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 42.90 கோடியாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,55,225 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.