மும்பையில் நாளைமுதல் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி

மும்பையில் நாளைமுதல் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மும்பையில் நாளைமுதல் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி
மும்பையில் நாளைமுதல் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி
Updated on
1 min read

மும்பையில் நாளைமுதல் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை மாநகராட்சி சார்பில் நாளை முதல் 35 சிறப்பு மையங்கள் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com