கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பாதிப்பு எண்ணிக்கை: இந்தியாவில் 125 நாள்களில் இல்லாத அளவு சரிவு

இந்தியாவில் புதிதாக 30,093 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 125 நாள்களில் பதிவான மிகக் குறைந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும்.

இந்தியாவில் புதிதாக 30,093 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 125 நாள்களில் பதிவான மிகக் குறைந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும்.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 30,093 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,11,74,322-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது தினசரி கரோனா பாதிப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது. இது கடந்த 29 நாள்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 41.18 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மே 4-ஆம் தேதி 2 கோடியைக் கடந்த நிலையில், ஜூன் 23-ஆம் தேதி 3 கோடியைக் கடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com