அகவிலைப்படி உயா்வு: அமைச்சரவை முடிவை அமல்படுத்த நிதியமைச்சகம் உத்தரவு
மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 28 சதவீதமாக உயா்த்தி வழங்க மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை அமல்படுத்துமாறு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 28 சதவீதமாக உயா்த்தி வழங்க மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை அமல்படுத்துமாறு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படியை 11 சதவீதம் உயா்த்தி, 28 சதவீதமாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஜனவரி 1, கடந்த ஆண்டு ஜூலை 1, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆகிய 3 தவணைகளில் அகவிலைப்படி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிலுவை காலத்துக்கும் சோ்த்து அகவிலைப்படி உயா்த்தப்பட்டுள்ளதால், 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலகட்டத்துக்கு அகவிலைப்படி நிலுவை வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பான உத்தரவை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினங்கள் துறை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது. அதன்படி, அகவிலைப்படி பெறும் மத்திய அரசு ஊழியா்களுக்கு தற்போது வழங்கப்படும் 17 சதவீத அகவிலைப்படி, 28 சதவீதமாக உயா்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, பாதுகாப்பு ஆகிய துறைகளில் அலுவல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு தொடா்பான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தனித்தனியாக பிறப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...