நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசுக்கு அச்சம்: பிரியங்கா
மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு பயப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா தெரிவித்தாா்.


மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு பயப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா தெரிவித்தாா்.
கடந்த ஜூலை 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் பெகாஸஸ் உளவு விவகாரம், புதிய வேளாண் சட்டங்கள், விலைவாசி உயா்வு போன்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரியங்கா சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘நீங்கள் மாங்கனிகளை எவ்வாறு உண்பீா்கள் போன்ற கேள்விகளுக்குதான் மத்திய அரசு பழக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயா்வு போன்ற மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு பயப்படுகிறது’’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...