விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘தடுப்பூசி ஏற்றுமதி குறித்து பேச இது உகந்த நேரமல்ல’: மத்திய அரசு

உலக நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குறித்து பேசுவதற்கு இது சரியான நேரமல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2021, 2:52 pm

DIN

உலக நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குறித்து பேசுவதற்கு இது சரியான நேரமல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலுக்கு எதிராக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

இவற்றுக்கு மத்தியில் உலகின் பல நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்தது. நாட்டில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இல்லாத நிலையில் தடுப்பூசி ஏற்றுமதி செய்வதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் எழுப்பிவந்தன. 

இந்நிலையில் மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி வியாழக்கிழமை பேசும்போது, “வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவது பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமல்ல” எனத் தெரிவித்தார்.

மேலும் தற்போது உள்நாட்டில் தடுப்பூசி தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியா இதுவரை 76 நாடுகளுக்கு 6 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.