சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 2021-ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருப்பதாக துணை முதல்வர் தினேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் சுமார் 26,09,501 பேர் தேர்வெழுதவிருந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றன.
ஏற்கனவே குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நவீன இன்வெர்ட்டர் குளிர்சாதனப் பெட்டிகள் சிறந்ததா? ஏன்?

ஒருநாள் போட்டி: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இலங்கை!
தவெக அரசு மீது கோபத்தில் மக்கள்! முதல்வர் விஜய் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்! பிரேமலதா

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் கெடு!
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி



