கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை

வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. 

News image
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை
Updated On :12 ஜூன் 2021, 9:37 am

DIN


சென்னை: வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. 

இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு இன்று முதல் 16-ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஓரிரு மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.