மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

'பாபா கா தாபா' உரிமையாளரான முதியவர் தற்கொலைக்கு முயற்சி

சமூக வலைத்தளத்தின் மூலம் பிரபலமடைந்த தெற்கு தில்லி பகுதியில் பாபா கா தாபா என்ற உணவகத்தை நடத்தி வந்த 81 வயது முதியவர், தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image

'பாபா கா தாபா' உரிமையாளரான முதியவர் தற்கொலைக்கு முயற்சி

Updated On :18 ஜூன் 2021, 12:25 pm


புது தில்லி: சமூக வலைத்தளத்தின் மூலம் பிரபலமடைந்த தெற்கு தில்லி பகுதியில் பாபா கா தாபா என்ற உணவகத்தை நடத்தி வந்த 81 வயது முதியவர், தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெருவோரமாக மிகச் சிறிய உணவகத்தை நடத்தி வந்த பாபா கா தாபா உரிமையாளர் கந்த பிரசாத் பற்றி சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியானது. பொது முடக்கத்தால், தனது உணவகத்துக்கு யாரும் வரவில்லை என்று அவர் கவலை வெளியிட்ட விடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல பிரபலங்களும் அந்த உணவகத்துக்குச் சென்று உணவருந்தியதோடு, அவருக்கு பண உதவிகளும் குவிந்தன.

இதற்கிடையே, தன்னைப் பற்றி செய்தி வெளியிட்ட கௌரவ் வாசன்  மீதே பண மோசடிப் புகாரையும் அளித்திருந்தார்.

தனக்குக் கிடைத்த நிதியைக் கொண்டு கடந்த டிசம்பர் மாதம் அவர் மிகப்பெரிய உணவகம் ஒன்றை தில்லியில் தொடங்கினார். பல ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட உணவகத்தில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்பதால் ஒரு லட்சம் செலவிட்டு தொடங்கிய உணவகத்தை விற்றுள்ளார். அதில் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளது. பிறகு, பழையபடி, தெருவோரத்தில் இருந்த தனது சிறிய கடையை நடத்தி வந்துள்ளார். பணமோசடிப் புகார் அளித்த கௌரவ் வாசனிடம் மன்னிப்பும் கோரியிருந்தார். 

இந்த நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் உணவகம் தொடங்கியதில் நட்டம் ஏற்பட்ட விரக்தியில் இருந்த கந்த பிரசாத், தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பிரசாத் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. மதுபானத்தில் தூக்க மாத்திரைகள் கலந்து குடித்ததாக மருத்துவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உணவகம் தொடங்கியதில் ஏற்பட்ட நஷ்டத்தால், கந்த பிரசாத் கடும் மனஅழுத்தத்தில் இருந்ததாக அவரது  மனைவி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.