/

‘சரத்பவாருடன் ராகுல் கைகோர்க்க வேண்டும்’: சிவசேனை

பாஜகவுக்கு எதிரான சரத்பவாரின் முயற்சிக்கு காங்கிரஸின் ராகுல்காந்தி கை கொடுக்க வேண்டும் என சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
‘சரத்பவாருடன் ராகுல் கைகோர்க்க வேண்டும்’: சிவசேனை
Updated On :24 ஜூன் 2021, 10:22 am

DIN

பாஜகவுக்கு எதிரான சரத்பவாரின் முயற்சிக்கு காங்கிரஸின் ராகுல்காந்தி கை கொடுக்க வேண்டும் என சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக 2024ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நாடு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட 8 பிரதானக் கட்சியின் பிரதிநிதிகளுடன் தில்லியில் உள்ள தனது இல்லத்தில் சரத்பவார் ஆலோசனையில் ஈடுபட்டார்.

நடப்பு அரசியல் மற்றும் 2024 தேர்தல் குறித்து சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் சரத்பவாரின் முயற்சி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி சரத்பவாரின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும் என சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாமானாவில், “ராகுல்காந்தி தொடர்ந்து டிவிட்டரில் மத்திய அரசையும் அதன் கொள்கைகளையும் தாக்கி வருகிறார். நாட்டின் நிலைமை மோடியிடமிருந்து கைமீறிவிட்டது.

மக்கள் மத்தியில் கோபம் இருந்தபோதிலும், பலவீனமான மற்றும் முரண்பாடான எதிர்ப்பின் காரணமாக தாங்கள் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள மாட்டோம் என்று பாஜகவும் அதன் அரசாங்கமும் நம்பிக்கை கொண்டுள்ளன" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ராகுல் காந்தி சரத்பவாருடன் கைகோர்க்க வேண்டும் என்று சாமானா வலியுறுத்தியுள்ளது.

சரத்பவார் மேற்கொண்டிருக்கும் முன்னெடுப்பை ராகுல்காந்தி தான் மேற்கொண்டிருக்க வேண்டும் என அப்பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.