இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

5 மாநில தேர்தல்: மூத்த அமைச்சர்களுடன் நட்டா ஆலோசனை

5 மாநில பேரவைத் தேர்தலுக்கான தயார் நிலை குறித்து பாஜக கட்சித் தலைமை சனிக்கிழமை ஆலோசனை நடத்தியது.

News image
Updated On :26 ஜூன் 2021, 11:28 am

DIN


5 மாநில பேரவைத் தேர்தலுக்கான தயார் நிலை குறித்து பாஜக கட்சித் தலைமை சனிக்கிழமை ஆலோசனை நடத்தியது.

தில்லியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் புரி மற்றும் கிரண் ரிஜிஜு பங்கேற்றனர். இதுதவிர தேசிய பொதுச்செயலர் புபேந்திர யாதவ் மற்றும் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு வரவுள்ள பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, கட்சியின் அமைப்பு சார்ந்த நடவடிக்கைகள் குறித்து ஜெ.பி. நட்டா பொதுச்செயலாளர்களுடன் மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.