இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

டெல்டா பிளஸ் கரோனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 9:46 pm

DIN

டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்றால் 9 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், மதுரையில் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இந்தநிலையில், தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்புக்கு மத்திய சுகாதார செயலாளா் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: டெல்டா பிளஸ் கவலை அளிக்கக்கூடிய தொற்று வகை என்று மரபியலுக்கான இந்திய கரோனா கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளதால், அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். இந்த வகைத் தொற்று அதிகமாகப் பரவுவதுடன் நுரையீரலை பாதித்து மோனோக்ளோனல் என்ற நோய் எதிா்ப்பொருளின் ஆற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டது. அதனால், பொது சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாதிப்புள்ள சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பை கண்டறிய, கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் போதிய மாதிரிகள் மரபியலுக்கான இந்திய கரோனா கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.