மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரவி விஜயகுமார் மலிமத் நியமனம் 

ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான ரவி விஜயகுமார் மலிமத், 2021 ஜூலை 1 முதல் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்ற நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜூன் 2021, 5:05 pm

DIN

ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான ரவி விஜயகுமார் மலிமத், 2021 ஜூலை 1 முதல் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்ற நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேச தலைமை நீதிபதி லிங்கப்பா நாராயண சுவாமி ஓய்வு பெற்றதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த 1987-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட நீதிபதி ரவி விஜயகுமார் மலிமத், பி.காம்., எல்எல்.பி., கர்நாடகம், சென்னை உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தின் சிவில், குற்றம், அரசியலமைப்பு, தொழிலாளர், நிறுவனங்கள் சேவை வழக்குகளில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றினார். 
பெங்களூருவில் உள்ள பெங்களூரு பல்கலைக்கழகம் மற்றும் ஷிமோகாவின் குவெம்பு பல்கலைக்கழகத்திலும் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2010- ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் அவர் நியமிக்கப்பட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.