இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

மகாராஷ்டிரத்தில் 10, 12-ம் வகுப்புத் தேர்வு ஆன்லைனில் நடைபெறாது: கல்வி வாரியம் 

மகாராஷ்டிரத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படமாட்டாது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் சனிக்கிழமை அறிவித்தார். 

News image
Updated On :20 மார்ச் 2021, 3:30 pm IST

மகாராஷ்டிரத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படமாட்டாது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் சனிக்கிழமை அறிவித்தார். 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு நேரடியாகச் சென்று தான் தேர்வெழுத வேண்டும். மேலும் அவரவர் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 

பொதுத்தேர்வு தேதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வுகள் முடிந்ததும் நடைமுறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

12-ம் வகுப்புக்கு ஏப்ரல் 23 முதல் மே 21 வரையிலும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 29 முதல் மே 20 வரையிலும் தேர்வு நடைபெறும் என்று மகாராஷ்டிர கல்வி வாரியம் கடந்த மாதம் அறிவித்தது. 

இந்த பொதுத்தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்தாண்டு கரோனா தொற்றுநோய் காரணமாக அட்டவணை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.