வாக்குக்காக காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யும்: பிரதமர் மோடி
அசாமில் இடதுசாரியுடன் கூட்டணி வைப்பது கேரளத்தில் அவர்களை விமரிசிப்பது என வாக்குக்காக காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி விமரிசித்துள்ளார்.


அசாமில் இடதுசாரியுடன் கூட்டணி வைப்பது கேரளத்தில் அவர்களை விமரிசிப்பது என வாக்குக்காக காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி விமரிசித்துள்ளார்.
அசாம் மாநிலம் லகிம்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் பேசியது:
"அசாம் இன்று வளர்ச்சியடைந்து ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுபட்டுள்ளது. அசாமின் அடையாளத்தை அழிக்கும் நோக்கத்தைக் கொண்டவர்களுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. அசாமின் பாரம்பரியங்கள் சிதைக்கப்பட வேண்டுமா? ஊடுருவல்களை ஊக்குவிக்கும் குழுவிடமிருந்து காங்கிரஸ் உதவிகளைப் பெறுகிறது.
தேயிலைத் தொழிலாளர்களின் கூலியை காங்கிரஸ் 100 ரூபாய்க்கு கூட உயர்த்தவில்லை. அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணி 5 ஆண்டுகளில் கூலியை இரட்டிப்பாக்கியுள்ளது.
வாக்குக்காக காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யும். இங்கு இடதுசாரியுடன் கூட்டணி அமைத்து கேரளத்தில் அவர்களை விமர்சிக்கிறது. இது மெகா கூட்டணி அல்ல. மெகா பொய்க் கூட்டணி. எந்தவொரு திட்டத்தின் பிரதிநிதியாகவும் இவர்கள் இருக்க மாட்டார்கள். இதுபோன்ற கூட்டணி ஊடுருவலையும், ஊழலையுமே உறுதி செய்யும்" என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...