தமிழகத்தில் பிரசாரம் செய்யவுள்ள காங்கிரஸ் தலைவர்களின் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ள காங்கிரஸ் தலைவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.


சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ள காங்கிரஸ் தலைவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பிரசாரத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, சிதம்பரம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தினேஷ் குண்டுராவ், மணிஷ் திவாரி மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்குபெற உள்ளனர்.
மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் ஆகியோரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத்தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதியும் நடைபெறும்.
முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் மார்ச் 28-ம் தேதி ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெறவுள்ள திமுக கூட்டணி கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...